யோசித்து பார்கையில்

I rarely write in Tamil. Nevertheless I do write. Re-posting a blog – a poem – a reflection (whatever it might be) that I posted long back in my other blog
ஒரு குழந்தையின் சிரிப்பு,
ஒரு குழந்தையின் அழுகை,
இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டிய மாலை வானம்,
மரகிளையில் தனியே அமர்ந்துள்ள சிட்டுக்குருவி,
வானுயர பறக்கும் கழுகு,
நீண்டநாள் கழித்து பார்த்த நண்பன்,
முதல் காதலின் நினைப்பு,
தெருவோரம் உள்ள டீ-கடையில் ஒலிக்கும் ஒரு பழைய பாடல்,
அதிகாலையில் சாமிக்காக சமைத்த கூட்டு பொரியல் சாதம்,
ஹோட்டல் உணவு சாப்பிட்டு அழுத்தபின் கிடைக்கும் வீட்டு சாப்பாடு,
குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டது,
பலநாள் சுற்றுபயணத்தின் பின் வீடு திரும்பும்போது பொழியும் அன்பும், பாசமும்,
கல்லூரியில் எழுதிய கவிதையின் நினைப்பு,
முதன்முதலாக வாங்கிய பாராட்டு,
எதிர்பார்க்காத போது கிடைத்த கைதட்டல்,
– இதையெல்லாம் யோசித்து பார்கையில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *